நாம் தமிழர் உறவுகளுக்கு...
வருகின்ற தேர்தலில் நமது செயல்பாடுகளை முடக்க மிகப்பெரிய வேலைத்திட்டங்களுடன் 'பெரிய' மனிதர்கள் ஆசியுடன் சிலர் இறங்கியுள்ளார்கள். சமீப காலமாக அண்ணன் சீமான் அவர்களுக்கு மக்களிடையே அபரிதமாக பெருகி வரும் செல்வாக்கு,மற்றும் நாம் தமிழர் கட்சியின் கூட்டங்களுக்கு கூடுகிற கூட்டம் போன்றவை சில தலைவர்களுக்கு கடுமையான எரிச்சலை கிளப்பி விட்டிருக்கின்றன. எனவே சாதீய தலைவர்களை நாம் தமிழருக்கு எதிராகத் தூண்டி, வழக்கு நடவடிக்கைகளில் நம்மை தொடர்ச்சியாக சிக்க வைத்து, நமது கவனத்தை திசை திருப்பி ,அரசியல் களத்தில் நமது இருப்பை பலவீனமாக்க கடும் திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நமது உறவுகளும் இது போன்ற சதி வலைகளில் சிக்காது..எதிர்பார்ந்திருந்தவர்களின் நினைப்பில் மண்ணை அள்ளி போட வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் அண்ணன் சீமான் திட்டி விட்டதாக கூறி விசனப்படும் திராவிட கூட்டம், அலைபேசியை எடுத்து சாதி வெறியோடு கீழ்த்தரமாக உரையாட தொடங்கியவர்களை ( திறமையாக எடிட் செய்து )ஏதாவது கேள்வி கேட்டிருக்கிறார்களா...? வரிசையாக சாதி அமைப்புகள் சீமானை மட்டும் குறி வைத்து பாய்வதன் அரசியலை சாதிமறுப்பாளர்கள், பெரியாரிஸ்ட்டுகள் என்றெல்லாம் கூவுகின்ற புரட்சியாளர்கள் உணர்ந்திருக்கிறார்களா...? என்றெல்லாம் நம்மிடமும் கேள்விகள் இருக்கின்றன.
சாதி மறுத்து..இத்தனை ஆண்டு காலமும் தமிழர் என்ற ஓர்மை ஏற்படுத்த துடிப்பவர்களை விட ...சாதி சங்க ஆட்களே முக்கியம், அவர்களை பாதுகாக்க சீமானை வீழ்த்த வேண்டும் என இவர்கள் நினைக்கிறார்கள் என்றால்... இவர்களே சாதீய உணர்வின் பாதுகாவலர்கள் என பட்டவர்த்தனமாக நமக்கு புரிகிறது.
மேலும் தமிழ், தமிழர் என்று தமிழ்த்தேசியம் பேச முனையும் எவருக்கும் தீவிரவாதி,ரவுடி, பயங்கரவாதி ,தேச விரோதி என்றெல்லாம் பட்டங்கள் சூட்டப்படுவதையும் நாம் பார்க்கின்றோம்.
வேண்டுமென்றே ஒரு பிரச்சனையை கிளப்பி, நம்மை திசை திருப்ப முயலும் இந்த சதிகளை ...நம்மை வழி நடத்தும் மாவீரர்களின் மூச்சுக்க்காற்றின் வலிமைக் கொண்டு நாம் முறியடிக்க வேண்டும்.
அன்பான உறவுகளும்... இத்தகைய சதிகளை புரிந்துக்கொண்டு.. நம் உணர்ச்சிவசப்படுதலை எதிர்ப்பவர்களுக்கு சாதகமாக்காமல்... அறிவின் பலங்கொண்டு..தமிழ்த் தேசிய விடுதலைக்களத்தில் பங்களிப்பினை செய்ய வேண்டுமென நாங்கள் உரிமையோடு கோருகிறோம். சாதியாய் நிற்கிற தமிழன்...இன்னமும் சாதியாய் நின்றால்.. மீதி எதுவும் மிஞ்சாது ..
எவ்வித எதிர்ப்பினையும் எதிர்க்கொள்ள நம் தேசியத்தலைவர் அவர்கள் நமக்கு ஆன்ம பலம் வழங்கியுள்ளார்கள். தேர்தல் களத்தில் திராவிடக்க்கட்சிகளுக்கு நாம் அளிக்கப் போகின்ற பதிலடியே...இது வரை ஆட்சி அதிகாரத்தில்,கட்சி வலிமையில், தமிழர் பிரிவினையில் இங்கே வாழ்வாங்கு வாழ்ந்தவர்களுக்கு மிகப்பெரிய தலையிடியாக விழும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை. நாங்கள் குறிப்பிட்ட எந்த சாதிக்கும்,மதத்திற்கும் எதிரானவர்கள் இல்லை. இந்த சாதி,மத அமைப்பிற்கே எதிரானவர்கள்.
நாம் தமிழர் அரசியல் என்பது அனைவருக்குமானது. எம் அமைப்பிலேயே தமிழ்த்தேசிய இன விடுதலையில் தனது பங்களிப்பினை செலுத்த எண்ணற்ற பிற மொழி உறவுகள் உழைத்து வருகிறார்கள்.அவர்களில் சிலர் எம் வேட்பாளர்களாக, கட்சியின் மிக முக்கிய பொறுப்பாளர்களாக இருக்கிறார்கள். அவர்களை எம் உயிரோடு உடன்பிறந்தவர்களாக கருதி நேசிக்கிறோம். அதே சமயத்தில் தமிழ்த்தேசிய இன விடுதலைக்கு எதிராக நிற்பவர்களை.. பிறப்பால் தமிழர்களாக இருந்தாலும் நாங்கள் எதிர்க்கிறோம்.
இன்னும் சுருக்கமாக.. சொல்வதென்றால்.. இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை. நாம் தமிழர்.
மணி செந்தில். பாக்கியராசன் சே. இணையத்தளப் பாசறை தலைமைப் பொறுப்பாளர்கள் நாம் தமிழர் கட்சி.
நாம் தமிழர் காணொளிகள் மொத்த தொகுப்புNaam Tamilar Videos Total Collections | |
காணொளி தொகுப்பு ஆண்டுVideo Collection Year | இணைப்பு | Link |
2016, 2017, 2018 .......... | http://tamilcat.com/?p=13271 |
2015 | http://tamilcat.com/?p=13253 |
2014 | http://tamilcat.com/?p=13189 |
2013 | http://tamilcat.com/?p=13108 |
2012 | http://tamilcat.com/?p=13046 |
2011 | http://tamilcat.com/?p=13056 |
2010 | http://tamilcat.com/?p=13024 |
2009 | http://tamilcat.com/?p=13020 |
2008 | http://tamilcat.com/?p=13012 |
2007 | http://tamilcat.com/?p=13007 |
2006 | http://tamilcat.com/?p=13001 |
Post a Comment