GuidePedia

2

‘கட்டபொம்மன் கொள்ளைக்காரன்!’

கடந்த சனவரி 2011 அன்று சென்னையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன் அதில் மூன்று புத்தகங்களை வாங்கினேன் அதில் ஒன்று தமிழ்வாணன் எழுதிய ‘கட்டபொம்மன் கொள்ளைக்காரன்!’ என்ற நூலாகும்.

அந்நூலில் உள்ள பல செய்திகள் நாம் எண்ணிக் கொண்டிருப்பதற்கு மாறாக இருந்தன எனவே அதனைத் தங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். . முதலில் என்னை வியப்பில் ஆழ்த்தியது கட்டபொம்மனின் தாய் மொழி தெலுங்கு என்பதாகும். பலபேர் இன்று வரை கட்டபொம்மனை பச்சைத் தமிழன் என்றே போற்றிப் பரப்புரை செய்து வருகிறார்கள். ஒரு தெலுங்கனைத் தமிழன் என்று காட்டிக்கொள்வதில் தமிழர்களுக்கு என்ன பெருமையோ அல்லது தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கர்களுக்குத் தான் என்ன சிறுமையோ தெரியவில்லை. ஆகமொத்தத்தில் கட்டபொம்மன் தெலுங்கன் என்பதில் தெளிவு கொள்வோம். . கட்டபொம்மனின் பரம்பரையில் முதலாமவன் கட்ட பிரமையா ஆவான் இவன் மகன் கட்டபிரமையா என்ற முதலாம் ஜெகவீரப் பாண்டிய கட்டபொம்மன் என்பவனே முதல் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரனாவான் (1709-1736) இவரே வீரபாண்டியக் கட்டபொம்மனின் கொள்ளுப் பாட்டனும் ஆவார். . வீரபாண்டியக் கட்டபொம்மனுக்கும் வெள்ளையன் கலெக்டர் ஜாக்சனுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சியை தமிழ்வாணன் அவர்கள் தன்னுடைய ‘கட்டபொம்மன் கொள்ளைக்காரன்!’ நூலில் குறிப்பிட்டுள்ளதை மிகச் சுருக்கமாக இங்கே குறிப்பிட விரும்புகிறேன். . திருநெல்வேலி கலெக்டர் ஜாக்சன், வரிகட்டச் சொல்லி வீரபாண்டியக் கட்டபொம்மனுக்கு கடிதம் மேல் கடிதம் அனுப்புகிறார். வீரபாண்டியக் கட்டபொம்மனோ தவணை மேல் தவணை சொல்லித் தட்டிக்கழித்து வருகிறான். இதனால் ஆத்திரம் கொண்ட ஜாக்சன், தன்னை 05.09.1798 அன்று இராமநாதபுரத்திற்கு நேரில் வந்து பார்த்து விளக்கம் (பேட்டி) தரவேண்டும் இல்லையேல் பாஞ்சாலங்குறிச்சிப் பாளையம் பறிமுதல் செய்யப்படும் என்று கடிதம் அனுப்பினார்.

ஜாக்சனின் கடிதத்தைக் கண்டதும் கட்டபொம்மன் குறிப்பிட்ட நாளில் ஜாக்சனைப் பார்க்க இராமநாதபுரத்திற்குத் தன் பறிபாரங்களுடன் செல்கிறார். கட்டபொம்மன் தன்னைப் பார்க்க வருகிறார் என்று அறிந்ததும் ஜாக்சன் குற்றாலத்திற்குக் கிளம்பிவிடுகிறார். கட்டபொம்மன் ஜாக்சனை சந்திப்பதற்காக, ஜாக்சனை பின் தொடர்ந்து குற்றாலத்திற்கு செல்கிறார் அங்கும் கட்டபெம்மனை பார்க்க ஜாக்சன் மறுத்துவிடுகிறான். இப்படியே ஒவ்வொரு ஊராக அதாவது சொக்கம்பட்டி, சேத்தூர், சிவகிரி, சிறிவில்லிபுத்தூர், பேரையூர், பவாலில், பள்ளிமடை, கமுதி என்று சுற்றி இறுதியில் இராமநாதபுரத்தை வந்தடைந்தார் ஜாக்சன். கட்டபொம்மனும் ஜாக்சன் சென்ற ஊருக்கெல்லாம் அவரை பின் தொடர்ந்து சென்றார். இதில் எந்த ஊரிலும் கட்டபொம்மனை சந்திக்க விரும்பாமல் அலைகழித்து வந்தார்.

இறுதியில் கட்டபொம்மன் இராமநாதபுரத்தில் ஜாக்சனை சந்தித்து விளக்கம் கொடுத்தான் வரிகட்டாமையைப் பற்றி ஜாக்சன் கேட்க, தான் கட்ட வேண்டிய பணத்தையும் கையோடு கொண்டுவந்துள்ளதாகக் கூறினான். அடுத்து அரசு கிராமங்களில் குழப்பம் ஏற்படுத்தியது தொடர்பாக கேட்க, அப்படியேதும் நான் செய்யவில்லை என்று கட்டபொம்மன் மறுத்துக் கூறுகிறார். இறுதியாக, “நமக்குள் ஏற்பட்ட இந்த உரையாடலைச் சென்னைத் தலைமைக்கு அனுப்புகிறேன் அதற்கான பதில் வரும் வரை நீங்கள் இங்கு இருக்கவேண்டும்” என்று ஜாக்சன் கூறியதும் கட்டபொம்மன் அஞ்சி அங்கிருந்து தப்பிவிடுகிறார். அவர் தப்பும் போது ஏற்படுகிற கலவரத்தில் ஒரு வெள்ளையன் கொலை செய்யபடுகிறான். கட்டபொம்மனின் அமைச்சனும் ஆலோசகனுமான தானாபதிப் பிள்ளை கைது செய்யப்படுகிறார்.

இந்த நிகழ்வு கட்டபொம்மனை வீரனாகக் காட்டுகிறதா? அல்லது வெள்ளையனுக்கு அடிபணிந்தவனாகக் காட்டுகிறதா? மேற்கண்ட நிகழ்வு பற்றிய பதிவு இன்றும் ஆவணக் காப்பகத்தில் இருக்கிறது என்கிறார். அப்படி என்றால் கட்டபொம்மன் வெள்ளையனுக்கு அஞ்சினான் என்பதில் எந்த ஐயமும் இல்லை. . அந்நூலில் குறிப்பிட்டுள்ள மற்றுமொரு நிகழ்வைக் குறிப்பிட வேண்டும் அதாவது கட்டபொம்மனைத் தூக்கில் போடுவதற்கு கூறப்பட்ட காரணங்களும் நிகழ்வுகளும் ஆகும்.

கட்டபொம்மனை பற்றிக் கூற ஆரம்பித்ததில் இருந்தே கட்டபொம்மன் தன்னுடைய பாளையத்தை விடுத்து மற்றைய பாளையங்களில் அவ்வப் போது ‪#‎கொள்ளையடித்து‬ வந்துள்ளான் என்று கூறிப்பிட்டுள்ளார். அதில் ஊற்று மலைப் பாளையத்தார் தங்கள் பாளையத்தில் கட்டபொம்மன் கொள்ளையடித்ததை வெள்ளையனிடம் புகார் தெரிவித்துள்ளார்.

அடுத்து சிவகிரி பாளையத்தில் தந்தைக்கும் மகனுக்கும் ஆட்சியைப் பிடிப்பதில் ஏற்பட்ட போட்டியில் கட்டபொம்மன் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்தியது மற்றுமொன்று தனது தம்பி மற்றும் தனது அமைச்சன் தானாபதிப் பிள்ளையின் மகன் திருமணத்திற்காக வெள்ளையனின் நெற் களஞ்சியத்தைத் தன் ஆட்களை விட்டுக் கொள்ளையடித்தது. இது போன்ற புகார்களை அடுத்து கட்டபொம்மனை மேஜர் பானர்மென் தன்னை சந்தித்து விளக்கம் தரக் கூறுகிறார். கட்டபொம்மன் ஜாக்சனை சந்திக்க அஞ்சு நாட்களைக் கடத்துகிறார். தன்னை சந்திக்காமல் காலம் கடத்தியதால் பானர்மென் பாஞ்சாலங்குறிச்சியின் மீது படையெடுக்கிறார். சண்டை நடக்கும் போதே கட்டபொம்மன் தனது பாளையத்தில் இருந்து தப்பிவிடுகிறார். (இந்த இடத்தில் தமிழ்வாணன் ஒன்றைக் குறிப்பிடுகிறார் அதாவது கட்டபொம்மன் தப்பித்ததே திருச்சியில் உள்ள வெள்ளைகார மேல் அதிகாரியிடம் சென்று மன்னிப்புக்கேட்டு தப்பிவிடலாம் என்பதற்காகவே தப்பினான் என்கிறார்).

கட்டபொம்மனைப் பிடிப்பதற்காக பானர்மேன் எட்டயபுர பாளையத்திடம் இருந்து நன்கு வழிகளைத் தெரிந்த சில வீரர்களை கேட்டுப் பெற்றுக் கொண்டு கட்டபொம்மனைத் தேடலானான். அதன் பிறகு கட்டபொம்மன் புதுக்கோட்டைப் பாளையத்தில் உள்ள ஒரு காட்டில் மறைந்திருப்பதை அறிந்ததும் பானர்மேன் கட்டபொம்மனைப் பிடித்துத் தரும்படி கேட்கப் புதுக்கோட்டைப் பாளையத் தளபதி அம்பலக்காரன் தலைமையிலான குழு கட்டபொம்மனைப் பிடித்து பானர்மேனிடம் ஒப்படைத்தார்கள். மேற்கண்ட பத்தியில் குறிப்பிட்டுள்ள காரணங்களைக் காட்டி தூக்கில் போடுகிறார்கள்.

நமக்குள்ள வருத்தங்கள் எவையென்றால்

ஒரு ‪#‎தெலுங்கனைத்‬ தமிழன் என்று பரப்புரை செய்வது, வெள்ளைக்காரனுக்கு அவ்வப்போது பணிந்து சென்ற ஒருவரை முழுக்க முழுக்க வெள்ளையனை எதிர்த்தான் என்று பரப்புரை செய்வது.

எட்டப்பன் என்ற ஒருவனைத் தமிழ்வாணன் அவர்கள் குறிப்பிடவேயில்லை. ஆனால் திரைபடத்தில், காட்டிக் கொடுத்தான் என்று எட்டப்பன் என்ற ஒருவனைக் காட்டியுள்ளது. ஆக, கட்டபொம்மன் என்று எடுக்கப்பட்ட திரைப்படம் பாதிக்கு மேல் ‪#‎வரலாற்றுப்பிழையாகவே‬ இருக்கும் என்று கருதுகிறேன். அதில் “வானம் பொழிகிறது பூமி விளைகிறது உனக்கேன் தரவேண்டும் கிஸ்தி (வரி)” போன்ற நீண்ட வசனத்தைப் பேசியிருக்க மாட்டான். அப்படியே பேசியிருந்தாலும் தெலுங்கில் தான் பேசியிருக்க வேண்டும்.

ஆக, தெலுங்கனுக்குத் தமிழன் அடிமை, வெள்ளையனுக்குத் தெலுங்கன் அடிமை அப்படியென்றால் அன்றைக்குத் தமிழகத்தை ஆண்ட தெலுங்கனுக்கு தமிழன், அடிமைக்கு அடிமையாகத் தான் இருந்துள்ளான்.

தமிழர்களே அவசியம் இந்நூலை வாங்கிப் படித்து தமிழ்நாட்டின் உண்மை வரலாற்றை அறிந்துக் கொள்ளுங்கள். “வெள்ளையனுக்கு அடிமைப்படாத ஒரு சுதந்திர அரசுக்கு அதிபதியாக இருந்திருந்தால், கட்டபொம்மன் கலெக்டரைக் காணப் போயிருக்க வேண்டியதில்லை.

கலெக்டரின் ஆணையை அவன் ஆண்மையுடன் மறுத்து நின்றிருக்கலாம். அவன் என்றுமே கும்பினிக்கு வரி செலுத்தாதவனாக இருந்தால், புதிதாக வந்து வரி கேட்பவர்களிடன் கொடுக்க முடியாது என்று உறுதியுடன் கூறியிருக்கலாம். அவன் எழுதியுள்ள எந்த ஒரு கடிதத்திலும், கட்டபொம்மன் ஆங்கிலக் கும்பினியின் மேலாதிக்கத்தை எதிர்க்கவில்லை. வரி கொடுக்க முடியாது என்றும் சொல்லவில்லை. அதற்கு மாறாக, வரி செலுத்துவதற்கு தவணைகள் தாம் கேட்டிருக்கிறான் அல்லது சாக்குப்போக்குகள் சொல்லி வந்திருக்கிறான்” (பக்கம் 159, கட்டபெம்மன் கொள்ளைக் காரன்)

வீரபாண்டிய கட்ட பொம்மன் திரைப்படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளரும் ‪#‎தெலுங்கர்கள்‬ என்ற தகவலும் இருக்கிறது.

‪#‎நன்றி‬ ‪#‎நான்காம்_தமிழ்ச்_சங்கம்‬!

Post a Comment

  1. If you read the version of British every freedom fighter is either called robber, decoit or conspirators...
    He is a telugu guy that is not a surprise thing for South Tamilnadu, we know him and his deoty Jakkamma... So we call them Jakkammas... But that doesn't mean he was a robber... He paid taxes.. Then he unable to pay taxes due to drought.... They are not Kings as portrayed by you with a lavish life... His only fault is He shouldn't have migrated to Tamilnadu... All credit goes to Tamil extremists like NTK..

    ReplyDelete
  2. South India was ruled by different kings n different time periods. Kattabomman origin is telugu which v never counter. But his forefathers settled in tamilnadu and ruled under arcot nawab. He speaks tamil and he ruled a tamil land. He paid taxes to British but when his self respect s hurt, he didn't just let it go and rose against the British. None knows if he speaks tht dialogue or not but tht dialogue doesn't make him a hero but d attitude. When there r thousands of palayakkar, why was only kattabomman hanged tht too infront of public? His mere existence kindle the fire of freedom in young minds. So plsdon't believe all the books in market.

    ReplyDelete

 
Top