GuidePedia

0

Archeological remains in Thiruvannamalai left unprotected. People insist govt to make necessary arrangements to Safeguard these Ancient Stones

ஜவ்வாது மலை: சிதைக்கப்படும் தொன்மை கல்திட்டைகள்

Keezhanur hamlet on the Javadi hills

5000 years old "Centre" for Sharpening Polished Neolithic (Stone) Tools

A “centre” for sharpening polished Neolithic (stone) tools made about 5,000 years ago has been found near the Keezhanur hamlet on the Javadi hills in Vellore district of Tamil Nadu. The “centre” is a bedrock in the middle of a rivulet, about a km from Keezhanur, with 21 grooves. It is in these grooves on the rock surface that the Neolithic man sharpened the edges of his polished stone axes when they got blunted after usage in cultivation. The shallow, trough-shaped grooves were formed by his constantly sharpening the tools against the rock surface.

R. Ramesh, a field researcher under the University Grants Commission-Special Assistance Programme, Department of History, Pondicherry University, found these grooves on February 16 during explorations on the Javadi hills, five km north of Pudur Nadu. This is the first time that grooves used for sharpening stone axes have been found in Tamil Nadu. They have been found at Sangnakallu-Kupagal in Bellary district, Karnataka.

Mr. Ramesh also found 75 polished stone axes of the Neolithic period collected by Keezhanur villagers on the fields near the rivulet. The villagers have kept these stone tools, along with ordinary stones, near a Ganesh temple and worship them as “ sami kal ” (divine stones). It was these “divine stones” that Mr. Ramesh first found and the villagers told him about the bed-rock with grooves which, they believed, were formed by the cattle kneeling on the rock and drinking water from the rivulet. They call the boulder kuzhi eruthu parai . When the researcher reached the bedrock, he found 10 grooves there and informed K. Rajan, Professor, Department of History, Pondicherry University, about them. Dr. Rajan told him to clean the surface and 21 grooves were revealed.

A week later, a team comprising Mr. Ramesh, Jinu Koshy of the Madras Christian College, M. Prasanna of the Archaeological Survey of India, T. Thangadurai and K. Mathivanan of Tamil University, Thanjavur, and V. Thukkan and G. Pauldurai of Pondicherry University visited the site and documented the grooves.

Dr. Rajan said, “The cultural transformation from food gathering to food production is considered a revolution in human history that happened during the Neolithic times. These tools represent the symbol of beginning of agricultural production in south India that took place about 5,000 years ago.” Human beings stayed in one place, observed the seasons and started doing agriculture. Dr. Rajan said the tools attained their final shape after passing through four stages: chiselling, pecking, grounding and polishing. The tools got smoothened after being constantly rubbed against the rocks. More rubbing led to their becoming polished tools. Since the Neolithic man constantly used these axes for cutting trees and plants, or digging out tubers from the soil, their sharp, working edges got blunted.

The polished stone tools belonged to two varieties: axes and adzes. While axes were used for cutting trees and plants, the adzes were used for ploughing. The adzes were tied to wooden staff and used for ploughing. After the advent of the Iron Age (circa 1,000 BCE), iron ploughs were made.

Dr. Rajan said that since stone axes belonging to the first three stages of their manufacture, viz chiselling, pecking and grounding were not available near Keezhanur, these tools must have been manufactured somewhere. During farming, these stone tools’ sharp edges got blunted. When they were sharpened on the bedrock for re-use, grooves were formed.

In Tamil Nadu, Neolithic settlements have been found at Paiyampalli in Dharmapuri, Mayilaadumparai and Kappalavadi in Krishnagiri, and Appukallu in Vellore districts.

Source: http://www.thehindu.com/todays-paper/tp-national/bedrock-on-which-neolithic-man-sharpened-stone-tools-found-in-tn/article4575216.ece

Valiyam Parai (Javadi Hills)

4000 years old Stone Age Tribals Caves

Wealth of information/ knowledge is available on the early inhabitants of Javadi hills, a place inhabited by human being even during Stone Age. Claims for supporting this are available in the form of 4000 years old Stone Age tribal caves. There are traces of evidence depicting the presence of Chitra Kullers before the invasion of present day outsiders. The rock houses still exist at Chepli above Pattaraikadu giving an affirmation that they might be kullers or the early tribes who lived as hunters. The glory of Javadi hills was prized even in the Patthu pattu, one of the earliest classical language Tamil literatures.

http://www.jawadhitribal.com/admin/Downloads/0868471001312491431.pdf

http://article.sapub.org/10.5923.j.microbiology.20120202.07.html

வாலியம் பாறை - குள்ளர் குகைகள்

அப்பகுதியை சேர்ந்த மலைவாசி மக்கள் செவி வழி செய்தியாக சொல்வது, வாலியம்பாறையில் வசித்த வாலியர்கள் என்ற கூட்டம் கட்டிய குள்ளர் குகைகள் அவை என்றும், 3 அடி உயரம் கொண்ட வாலியர்கள் பிறகு வடக்கே எங்கோ சென்று விட்டதாகவும் சொல்கிறார்கள். ஏராளமான சிறு பாறைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்து மேலே அகலமான ஒரு பெரிய பாறையை கூரையாக வைத்து குகை போல அமைத்துள்ளனர்.

போளுரிலிருந்து சுமார் 35 கிலோ மீட்டர் மலை பாதையில் பயணித்தால் அத்தியூரை அடையலாம். அங்கிருந்து கால்நடையாக காட்டுப்பாதையில் 3 கிலோமீட்டர் சென்றால் மேல்சிப்பிலி என்ற மலை கிராமம் வரும். உண்மையான காட்டுவாசி, மலை வாழ் மக்கள் வசிக்கும் பகுதி இது. யார் சென்றாலும் உடனே இளநீரை வழங்கி இளைப்பாற சொல்லிவிட்டு, சாமை அரிசி சோறு பொங்கி, பலாபழம், வள்ளி கிழங்கு, சிறு சிறு மலை வாழை பழங்களுடன் விருந்து சாப்பிட வைப்பார்கள். சராசரியாக 4 .5 அடி உயரம், கருத்த, உறுதியான தேகம், சுருண்ட, நீண்ட முடி, எச்சரிக்கை கலந்த அன்பு என உணர்ச்சி கலவையான மக்கள். காலை 6 மணி தொடங்கி மதியம் 12 மணி வரை கடுமையான மலை நிலத்தில் உழுதுவிட்டு, விலை பொருட்களில் அன்றைய தேவைக்கு ஏற்ப கொண்டு சென்று வார சந்தைகளில் விற்றுவிட்டு தங்களுக்கு தேவையானதை வாங்கிக்கொண்டு, கரடு, முரடான மலை பாதைகளில் மேலும் கீழுமாக சாதரணமாக 50 கிலோ மீட்டர் நடந்து விட்டு வந்து, மூச்சு கூட வாங்காமல் கிராமத்துக்கு புதிதாக வந்துள்ள வெளியாட்களிடம், வாலியர் குகைய பாக்கனும்னா, அங்கன நெட்டு குத்தா நிக்குதே ரெண்டு மலை அத ஏறி எறங்கணும், நாங்க வேனா துணைக்கு வரவா என அசராமல் கேட்கும் ஒரு நபருக்கு வயது கேட்டால் 85 என சொல்லி சிரிப்பார்.

மலை கிராம குடிசைகள் நிறைந்த எல்லாத் தெருவிலும், எல்லாருக்கும் பொதுவான ஒரு தானிய கூடு 30 அடி உயர்த்தி நிற்கும். குடிசைகளுக்குள் வீட்டுக்கு தேவையான அளவு சிறிய தானிய கூடு தனியாக இருக்கும். ஆடு, மாடுகளை போது பட்டியில் கட்டியிருப்பார்கள். கோழி, பன்றிகளை வீட்டுக்குள் விட்டு வைப்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் 3 முதல் 4 அடி உயர நாய்கள் துணையாக இருக்கும். இவர்கள் துணை இல்லாமல் குகை தேடி பயணித்தால் வீடு திரும்புவது அசாத்தியம். அவ்வளவு திருப்பங்களும், பள்ளத்தாக்குகளும், காட்டு விலங்குகளும் நிறைந்த அடர்ந்த காட்டுப்பாதை. கையில் நீண்ட கழிகளை ஊன்றுகோலாக எடுத்துக்கொண்டு, ( மனிதன் ரெண்டு கால்களில் நடக்கிறான் என யாரோ தவறாக பெருமைக்கு சொல்லிவிட்டு போய்விட்டார்கள் ) நடக்க தொடங்கினால் குறைந்தது இரு இடங்களிலாவது கால் இடறி கீழே விழுந்து, சிரைப்புகளை பெற்ற பிறகு கண்ணுக்கு எட்டியவரை தெரிவது ஒற்றை பாறை. சுமார் இரண்டு அல்லது மூன்று கிலோமீட்டர் நீள, அகலத்துக்கு குறையாமல் நிற்கும் உயர்ந்த ஒற்றை பாறை. ( இன்னும் மலை முழுங்கி மகாதேவங்களிடம் இருந்து இந்த பாறை தப்பித்திருக்க காரணம் பாதை வசதி இல்லாததுதான் ) அதன் மீது ஏறி சென்றால் கண்களால் பார்த்து நம்ப முடியாத குள்ளர் குகைகள் கொத்து கொத்தாக காட்சியளிக்கும்.

என்னுடைய கணிப்பு என்னவெனில், குகை அமைப்புகள் நிறைந்துள்ள அந்த பகுதி உள்ள வாலியம்பாறை, குகைகள், சுற்றியுள்ள பெரும் பள்ளத்தாக்குகள், எளிதில் யாரும் சென்று விட முடியாத பாதையற்ற நிலை, பாதுகாப்பு மிக்க சூழல் ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது, அந்த பகுதியின் பாதுகாப்புக்காக இருந்த வீரர்கள் தங்கிய குகைகளாக இருந்திருக்கக்கூடும். வாளியம்பாரையில் உள்ள உயர்ந்த முகட்டில் நின்று பார்த்தால் கிட்டத்தட்ட, பீமன் நீர்வீழ்ச்சி, பரமனந்தல் காடுகள், போளூர் சாலை என பல பகுதிகளை இங்கிருந்தே கண்காணிக்க முடியும். குரங்குகளை தவிர மற்ற விலங்குகள் வாலியம்பாறை மீது எளிதில் வந்துவிட முடியாது. அப்படி ஒரு அமைப்பு. அவசரத்துக்கு குகைக்குள் மூன்று பேர், மூன்று பேராக உட்கார்ர்ந்து கொள்ளமுடியும். மழை பெய்தாலும் தண்ணீர் உள்ளே வந்து தங்க முடியாதது போல பாறை முகடுகளின் மீது இவை உள்ளன. கிட்டத்தட்ட இதுபோல 200 குகைகள் உள்ளன. எனில் சுமார் 600 பேர் கொண்ட படை வீரர்கள் தங்கி இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கலாம். தங்கள் ஆயுதங்களை வைக்க குகைகளை பயன்படுத்தி இருக்கலாம். குகைகளின் அருகே இன்றும் கிடைக்கும் கல் ஆயுதங்களும் இதற்கு சாட்சியாக உள்ளன.

இதை தவிர வேறு வகையில் யோசித்தால், பொதுவாக நம் கிராமங்களில் இன்றும் காணக்கூடிய ஒரு காட்சி, வீட்டு உபயோக பொருட்கள் வீட்டுக்குள் பத்திரமாக இருக்க, குழந்தை குட்டியோடு வீட்டு உரிமையாளர்கள் வெளியே படுத்து உறங்குவார்கள். இன்னும் எளிதில் விளங்க வேண்டுமானால், குருவிகாரர்கள் எனப்படும் நாடோடி இனத்தவர்கள் ஆங்காங்கே ஊருக்கு வெளியே கூடாரங்கள் அமைத்து தங்கியிருக்கும் போது, துணிமணிகள், உணவு பொருட்கள், பாத்திரங்கள் எல்லாம் கூடாரத்துக்குள் இருக்கும். ஆனால் இவர்கள் மட்டும் வெட்டவெளியில் படுத்து உறங்குவார்கள். இளம் தம்பதியர் மட்டுமே கூடாரங்களில் உறங்குவார்கள். தவிர நோய்வாய் பட்ட குழந்தைகளும் கூடாரத்துக்குள் இருக்கும். கல் ஆயுதங்களை பயன்படுத்தி இருக்கும் வாலியர் கூட்டமும் தங்கள் பொருட்களை இந்த சிறு சிறு குகை அமைப்புகளில் பத்திரப்படுத்தி வைத்து விட்டு வெட்ட வெளியில் வாழ்ந்திருக்கலாம். மழை காலங்களில் மட்டும் உள்ளே புழங்கியும், இளம் தம்பதியர் தனித்திருக்கவும், உணவு, உடை, ஆயுதங்களை வைக்கவும் குகைகள் உருவாக்கப்பட்டு இருக்கலாம்.

http://image-thf.blogspot.in/2011/09/blog-post.html

http://thamizharkoodu.blogspot.in/2011/09/35.html

ஜவ்வாது மலையில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்திட்டைகள் கண்டுபிடிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் காணப்படுவதாக வரலாற்று மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஜவ்வாது மலையில், மேல்பட்டு அடுத்த பெரு முட்டம் என்ற சிறிய கிராமத்தில் நூற்றுக்கணக்கான “கல் திட்டை கள்” சிதைக்கப்பட்டு வருவதாக திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் வசிக்கும் தொல்லியல் ஆர்வலர் பிரேம் ஆனந்த் தெரிவிக்கிறார்.

அவர் மேலும் கூறும்போது, “ஜவ்வாது மலையில் பண்டைய மனிதர்களின் தொன்மையான வாழ்க்கை முறை பல ஆச்சரியங்களை ஏற்படுத்துகிறது. பெருமுட்டம் மலை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கல் திட்டைகள் உள்ளது தெரிய வருகிறது. இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக, இதுபோன்ற கல் திட்டைகளை பண்டைய மனிதர்கள் உருவாக்கி உள்ளனர். அதன் காலம், கி.மு.1,000 ஆண்டு களுக்கு முந்தையது என்று தொல்லியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

அந்த கிராமத்தில் உள்ள ‘பாண்டவர் குட்டை’ என்ற இடத்தில் 40-க் கும் மேற்பட்ட கல்திட்டைகளும், மலையடிவாரத்தில் 50-க்கும் மேற் பட்ட கல்திட்டைகளும், ஜொனை மடுவு என்ற பகுதியில் 30-க்கும் மேற்பட்ட கல்திட்டைகளும் காணப்படுகின்றன. அவை வெவ்வேறு அளவுகளில் உள்ளன. 6 அடி நீளமும், 4 அடி அகலமும் உள்ள பெரிய கல் திட்டைகள் மற்றும் 2 அடி நீளமும், ஒரு அடி அகலமும் உள்ள சிறிய கல் திட்டைகள் உள்ளன. அதனை குள்ளர் குகைகள் என்று மக்கள் அழைக்கின்றனர்.

பூமிக்கு மேலே உள்ள பாறையின் மீது பல கல்திட்டைகளும், பூமிக்கு கீழே பலகை கற்களை கொண்டு கல்லறை வடிவிலும் கல்திட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. கல்லறையை சுற்றி உருண்டை கற்களை அடுக்கி கல் திட்டைகளை உருவாக்கி உள்ளனர். பாறைகளுக்கு தீயிட்டு இயற்கையான முறையில் பாறைகளை பிரித்துள்ளனர்.

கல்திட்டைகள் அதிகம் உள்ள பகுதியில் வாழ்ந்த குள்ள மனிதர்கள், அவற்றை அழித்துவிட்டதாக தகவல் தெரிவிக்கிறது. மேலும், பாண்டவர்கள் வனவாசம் சென்ற போது, இந்த பகுதியில் தங்கி சென்றதாக மலைவாழ் மக்கள் நம்புகின்றனர். அதனாலேயே பாண்டவர் குட்டை என்று அழைக்கப்படுவதாக கூறுகின்றனர்.

ஜொனைமடுவு என்ற இடத்தில் கற்கருவிகளை உருவாக்க பாறையில் கல்லை கொண்டு, பண்டைய மனிதர்கள் தேய்த்ததால் ஏற்பட்ட பள்ளங்களை காணலாம். வரலாற்று சிறப்புமிக்க கல் திட்டைகளில் உள்ள கற்களை, வீடு கட்டும் பணிக்கு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். விவசாய பணியின்போதும் இவை அழிக்கப்படுகின்றன. இதை பாதுகாக்க தொல்லியல் துறை முன்வர வேண்டும்” என்றார்.

http://tamil.thehindu.com/tamilnadu/ஜவ்வாது-மலையில்-3-ஆயிரம்-ஆண்டுகளுக்கு-முந்தைய-கல்திட்டைகள்-கண்டுபிடிப்பு/article7496421.ece

நாம் தமிழர் காணொளிகள் மொத்த தொகுப்பு

Naam Tamilar Videos Total Collections

காணொளி தொகுப்பு ஆண்டுVideo Collection Yearஇணைப்பு | Link
2016, 2017, 2018 ..........http://tamilcat.com/?p=13271
2015http://tamilcat.com/?p=13253
2014http://tamilcat.com/?p=13189
2013http://tamilcat.com/?p=13108
2012http://tamilcat.com/?p=13046
2011http://tamilcat.com/?p=13056
2010http://tamilcat.com/?p=13024
2009http://tamilcat.com/?p=13020
2008http://tamilcat.com/?p=13012
2007http://tamilcat.com/?p=13007
2006http://tamilcat.com/?p=13001

If you want to help Tamil Cat. Please Donate (Click on "Add to Cart")

Post a Comment

 
Top