Dailythanthi
‘டாஸ்மாக்’ கடைகளை அகற்றக்கோரி நாம் தமிழர் கட்சியினர் கையெழுத்து இயக்கம்
சத்தியமங்கலம்,
சத்தியமங்கலம் பஸ் நிலையம் முன்பு தமிழக அரசின் ‘டாஸ்மாக்’ கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையை அகற்ற வேண்டும் என்று கோரி நாம் தமிழர் கட்சியின் பவானிசாகர் தொகுதி கிளை நிர்வாகிகள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு தொகுதி செயலாளர் தாமோதரன் தலைமை தாங்கினார். மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் பொதுகை சுந்தர் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சத்தியமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கூட மாணவிகள், பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்வத்துடன் கையெழுத்து போட்டனர்.
Post a Comment