Maalaimalar
ராசிபுரத்தில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்
ராசிபுரம், ஜூன்.11–நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் பர்மாவில் நடைபெறும் இஸ்லாமியர்கள் மீதான புத்த மத வெறி இன படுகொலையை கண்டித்தும், இதை மத்திய அரசு தடுத்து நிறுத்தக் கோரியும் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் எம்.ஜி.ஆர். சிலை அருகில் தொகுதியின் தலைவர் ராவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தொகுதி இணைச் செயலாளர் அருண்குமார் வரவேற்றார். தொகுதி துணைத் தலைவர்கள் மாணிக்கம், சீனிகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் பொ.நடராசு, மாவட்ட இளைஞர் பாசறை பூபதி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
இதில் பட்டணம் பொருப்பாளர்கள் மாரிமுத்து, குமரேசன் நாமகிரிபேட்டை செல்வகுமார், சீராப்பள்ளி யுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினார்கள். முடிவில் ராசிபுரம் நகர செயலாளர் சத்தியராசு நன்றி கூறினார்.
Post a Comment