தினமணி
நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கொடைக்கானலிலுள்ள மசாஜ் மையங்களை மூடக்கோரி நாம் தமிழர் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கொடைக்கானலில் பல்வேறு இடங்களில் மசாஜ் மையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றை மூடக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைவர் வினோத் தலைமையில் 20-க்கும் மேற்பட்டவர்கள் அண்ணா சாலையிலுள்ள தனியார் விடுதியில் இயங்கி வரும் மசாஜ் மையம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.
Post a Comment