GuidePedia

0

 

Tamil Chennaionline

நடிகர் சங்க தேர்தல் விவகாரம் : சீமான் கருத்து

திருச்சி,ஜூன் 20 (டி.என்.எஸ்) நடிகர் சங்க தேர்தல் குறித்து, சரத்குமார், ராதாரவி ஆகியோர் அணியாகவும், நடிகர்கள் விஷால், நாசர், கார்த்தி ஆகியோர் ஒரு அணியாகவும், செயல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், இப்பிரச்சினைக் குறித்து இயக்குனரும், நடிகருமான, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றதை தொடர்ந்து இன்று, திருச்சி மாவட்ட புதூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த சீமான் இது குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:

இலங்கையில் இறுதி கட்ட போரின் போது வெள்ளை கொடியுடன் சென்று சரணடைந்த 320 பேரை சுட்டு கொன்றதற்கு மத்திய அரசு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலையொட்டி தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனையை அந்த துறை சார்ந்த அமைச்சர் தலையிட்டு சுமூக நிலைக்கு கொண்டு வர வேண்டும்.

மதுவை ஒழிக்க வேண்டும் என்று நாங்கள் போராடுகிறோம். ஆனால் வைகோ மது விற்பனையை தொடங்கிய தி.மு.க.விடம் தற்போது கூட்டணி சேரும் நிலை உள்ளது. அவருக்கும் எங்களுக்கும் கொள்கை முரண்பாடு உள்ளதால் அவருடன் கூட்டு சேர வாய்ப்பு இல்லை. அதனால் வரும் சட்ட மன்ற தேர்தலை தனியாக சந்திப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")




Post a Comment

 
Top