Tamilnewssite
நாம் தமிழர் கட்சியில் இணைந்த 50-க்கும் மேற்பட்ட பாமக-வினர்! | 50 PMK members join in NTK
பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்ப்டடோர் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலராக இருந்த வியனரசு அக்கட்சியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியில் சீமான் முன்னிலையில் வியனரசு இணைந்தார். அவருக்கு மாநில அமைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த தெற்கு மாவட்ட செயலர் நந்தகுமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட அக்கட்சியினர் சனிக்கிழமை நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர். நாம் தமிழர் கட்சியின் தென்மண்டல அமைப்பாளரான வழக்குரைஞர் சிவகுமார் முன்னிலையில் அனைவரும் கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சியின் கொள்கை விளக்கப் புத்தகங்களை சிவகுமார் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வியனரசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Post a Comment