YouTube Video | யூடூப் காணொளி -
சீமானின் கோரிக்கையும், பாண்டவர் அணி பதிலும் | Seeman Request & Pandavar Team Answer | 25 October 2015
Dailymotion Video | டெய்லிமோசன் காணொளி -
சீமானின் கோரிக்கையும், பாண்டவர் அணி பதிலும் | Seeman Request & Pandavar Team Answer | 25 October 2015
Full Pressmeet Video | செய்தியாளர் சந்திப்பு
இந்திய நடிகர் சங்கம் என்கிற கமலின் ஆலோசனைக்கு சீமான் கடும் எதிர்ப்பு!
இந்திய நடிகர் சங்கம் என்று தென்னிந்திய நடிகர் சங்கத்துக்குப் பெயர் மாற்றவேண்டும் என்கிற கமலின் கருத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் தென்னிந்திய நடிகர் சங்கத்தை தமிழ்நாடு நடிகர் சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றும், கமலஹாசன் இந்திய நடிகர் சங்கம் என மாற்ற வேண்டும் என்று கூறியதற்கும் சீமான் கருத்து தெரிவித்ததாவது:
‘பலகோடி தமிழ் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ரஜினிகாந்த் சொல்லியிருக்கும் கருத்தை நான் வரவேற்கிறேன். அவரது மதிப்பார்ந்த கருத்துக்கு நன்றி.
கமலஹாசன் இந்திய நடிகர் சங்கம் என்று மாற்ற வேண்டும் எனச் சொல்லியிருக்கும் கருத்தை நான் மதிக்கிறேன். ஆனால், அதற்கு முன்பு கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற எல்லா மாநிலங்களிலும் இந்திய நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றிவிட்டு இந்த நடிகர் சங்கத்தை இந்திய நடிகர் சங்கமென்றோ அல்லது அகில உலக நடிகர் சங்கம் என்றோகூட மாற்றிக் கொள்ளட்டும்.
அதே இந்தியப் பற்றோடு காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு போன்ற ஆற்று நீரை தமிழகத்திற்கு பெற்றுக்கொடுத்துவிட்டால் ரொம்ப மகிழ்ச்சியடைவோம். கேரளாவில், கேரள நடிகர் சங்கம் என்று தனியாக வைத்து கேரள நடிகர்கள் மலையாளிகளாகவே இருப்பர், ஆந்திராவில், தெலுங்கு நடிகர்கள் தனியாக சங்கம் வைத்து தெலுங்கராகவேஇருப்பர். கர்நாடகத்தில், கன்னட நடிகர்கள் தனியாக சங்கம் வைத்து கன்னடராகவே இருப்பர். நாங்கள் மட்டும் தென்னிந்தியா என்று வைக்க வேண்டுமா? வேண்டாம். தமிழ் நடிகர்கள் சங்கமாக மாற்றவேண்டும் என்று சொன்னால் இந்தியா என்று வைக்கவேண்டுமா?’ என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்
நாம் தமிழர் காணொளிகள் மொத்த தொகுப்புNaam Tamilar Videos Total Collections | |
காணொளி தொகுப்பு ஆண்டுVideo Collection Year | இணைப்பு | Link |
2016, 2017, 2018 .......... | http://tamilcat.com/?p=13271 |
2015 | http://tamilcat.com/?p=13253 |
2014 | http://tamilcat.com/?p=13189 |
2013 | http://tamilcat.com/?p=13108 |
2012 | http://tamilcat.com/?p=13046 |
2011 | http://tamilcat.com/?p=13056 |
2010 | http://tamilcat.com/?p=13024 |
2009 | http://tamilcat.com/?p=13020 |
2008 | http://tamilcat.com/?p=13012 |
2007 | http://tamilcat.com/?p=13007 |
2006 | http://tamilcat.com/?p=13001 |
Post a Comment