GuidePedia

0

தமிழீழ அரசியல்பிரிவுப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை 05.00 மணிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில், இராவணன் குடிலில் நடைபெறுகிறது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரையாற்றுகிறார்.

நாம் தமிழர் காணொளிகள் மொத்த தொகுப்பு

Naam Tamilar Videos Total Collections

காணொளி தொகுப்பு ஆண்டுVideo Collection Yearஇணைப்பு | Link
2016, 2017, 2018 ..........http://tamilcat.com/?p=13271
2015http://tamilcat.com/?p=13253
2014http://tamilcat.com/?p=13189
2013http://tamilcat.com/?p=13108
2012http://tamilcat.com/?p=13046
2011http://tamilcat.com/?p=13056
2010http://tamilcat.com/?p=13024
2009http://tamilcat.com/?p=13020
2008http://tamilcat.com/?p=13012
2007http://tamilcat.com/?p=13007
2006http://tamilcat.com/?p=13001

If you want to help Tamil Cat. Please Donate (Click on "Add to Cart")

சு. ப. தமிழ்ச்செல்வன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்தவர். தினேஸ் என்ற இயக்கப் பெயரைக் கொண்டிருந்த இவர் புலிகள் இயக்கத்தில் கீழ் மட்டங்களில் இருந்து வளர்ந்து இறப்பின் போது புலிகளின் தலைமையின் உள்வட்டத்தின் ஒருவராக செயற்பட்டார். 1987 இல் யாழ். தென்மராட்சி கோட்டப் பொறுப்பாளராகவும் 1991 ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாண மாவட்ட சிறப்புத் தளபதியாகவும் செயற்பட்டார். 1993 இல் கிளிநொச்சி மாவட்டம் பூநகரியில் இலங்கை இராணுவத் தளம் மீதமான தவளைப் பாய்ச்சல் என்கிற விடுதலைப்புலிகளின் இராணுவ நடவடிக்கையில் போரில் காலில் காயமடைந்ததைத் தொடர்ந்து அரசியற் துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்; 2007 நவம்பர் இலங்கை வான்படையின் தாக்குதலில் கொல்லப்படும் வரை அப்பதவியில் இருந்தார். பல ஆண்டுகளாக விடுதலைப் புலிகளின் பகிரங்க முகமாக செயற்பட்டு இராணுவ இயக்கமாக இருந்த புலிகள் இயக்கத்தில் அரசியல் மாற்றங்களையும் ஏற்படுத்தி வந்தார். புலிகளின் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்று வந்த இவர் அன்ரன் பாலசிங்கத்தின் மறைவுக்குப் பின்னர் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவராகவும் செயற்பட்டு வந்தார். 23 ஆண்டுக் கால இயக்க வாழ்வைக் கொண்ட இவரின் இறப்பு புலிகளால் ஈடு செய்யப்பட முடியாது என பிபிசி கருத்து வெளியிட்டது.[1][2]

வாழ்க்கைச் சுருக்கம்

தமிழ்ச்செல்வன் யாழ்ப்பாண மாவட்டத்தின் சாவகச்சேரியில் பிறந்தார். இவர் தனது கல்வியை சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் பயின்றார். 1984 இல் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து இந்தியாவில் ஆயதப் பயற்சி பெற்றார்.

1993 இலிருந்து இறக்கும் வரை தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளராகச் செயற்பட்டார். நோர்வே அனுசரணையில் இலங்கை அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றினார். அன்ரன் பாலசிங்கத்தின் மரணத்தைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் அமைப்பின் அதியுயர் அரசியற் தலைவரானார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பிரிகேடியர் தரத்துக்கு அவர் நிலையுயர்த்தப்பட்டுள்ளார். அரசியற் செயற்பாடுகள்

தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் 4 ஆவது பயிற்சி முகாமில் அவர் பயிற்சியைப்பெற்று தமிழகத்தில் வே. பிரபாகரனின் தனிப்பட்ட இணைப்பாளராக பணியாற்றினார்.

1986 இல் வே.பிரபாகரன் தமிழகத்திலிருந்து ஈழம் வருவதற்கு முன் ஈழத்துக்கு வந்து களநிலைமைகள் பற்றிய தகவல்களை திரட்டி மீளவும் தமிழகம் சென்று திரும்பவும் வே. பிரபாகரனுடன் தாயகம் திரும்பினார். அப்போது அவரின் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் தினேஸ் என்பதாகும்.

தமிழகத்திலிருந்து திரும்பிய அவர், 1987 மே மாதம் யாழ். தென்மராட்சி கோட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

1991 வரை அப்பதவியில் அவர் நீடித்தார். இந்தியப் படைகளுக்கு எதிரான போரில் தென்மராட்சியில் நின்று தாக்குதல் நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார்.

1991 இல் யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியாக செயற்பட்டார்.

1993 இல் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற நிலையை அவர் பெற்று கடைசிவரை அந்தப் பொறுப்பில் இருந்தார்.

1994-1995 இல் சந்திரிகா அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகளின் அணிக்கு தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.

2002 ஆம் ஆண்டு நோர்வே அனுசரணையிலான பேச்சுவார்த்தைக்குழுவில் அன்ரன் பாலசிங்கத்துடன் இருந்து பின்னர் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைமைப்பணியை செய்து வந்தார்.

படைத்துறைச் செயற்பாடுகள்

1987 - 1989 வரை யாழ் தென்மராட்சி பகுதியில் இந்திய இராணுவத்துக்கு எதிரான நேரடித் தாக்குதல்.

1991 இல் ஆகாய கடல்வெளி நடவடிக்கை (ஆனையிறவு இலங்கை இராணுவ முகாம் வலிந்த தாக்குதல்) இந்த நடவடிக்கையின்போது நெஞ்சில் காயமடைந்தார்.

1992 இல் இலங்கைப் படையினரின் "பலவேகய - 02" எதிர்ச்சமரிலும்.

தச்சன்காடு இலங்கைப் படைமுகாம் மீதான தாக்குதல்.

காரைநகரில் இலங்கைப் படையினர் மீதான தாக்குதல்.

1991 இல் மன்னார் சிலாபத்துறை இலங்கைப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு தளபதியாக செயற்பட்டார்.

பூநகரி சிறிலங்கா படைத்தளம் மீதான தவளைப் பாய்ச்சல் நடவடிக்கை, 1993 நடவடிக்கையில் பங்காற்றிய அவர் தன்னுடைய காலில் காயமடைந்தார்.

ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையில் தென்மராட்சி தனங்கிளப்பு சிறிலங்கா படைத்தளம் அழிப்பு உள்ளிட்ட தென்மராட்சிப்பகுதி மீட்புத்தாக்குதலில் கட்டளைத் தளபதியாக பங்காற்றினார்.

மறைவு

2007, நவம்பர் 2 காலை ஆறு மணியளவில் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் ஐந்து விடுதலைப் புலிகளுடன் கிளிநொச்சியில் இலங்கை வான்படையின் குண்டுவீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.[3]. இறக்கும்போது தமிழ்ச்செல்வனுக்கு மனைவி, எட்டு வயது மகள், மற்றும் நான்கு வயது மகன் ஆகியோர் இருந்தனர்.[1] சு. ப. தமிழ்ச்செல்வனின்

இறுதி உரை

“ தமிழினம் இரு முனைப்போரை சந்திக்கின்றது. ஒன்று எதிரியின் இன அழிப்பிற்குள்ளும் கொடுமையான போருக்குள்ளும் நாம் தள்ளப்பட்டு அதற்குள் இருந்து மீள்வதற்குமான விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கின்றோம். இன்னொன்று உலகத்தின் அசைவியக்கத்தோடு ஒன்றித்திருக்க வேண்டிய கட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம். அதற்காகவும் நாங்கள் போராடவேண்டியவர்களாக இருக்கின்றோம். ”

- சு. ப. தமிழ்ச்செல்வன்[4] இவற்றையும் பார்க்கவும்

வான்குண்டுவீச்சில் சு. ப. தமிழ்ச்செல்வன் இறப்பு

மேற்கோள்கள்

எதிராஜன் அன்பரசன் (நவம்பர் 2,2007). "Public face of the Tamil Tigers". பிபிசி. பார்த்த நாள் நவம்பர் 2,2007. பிபிசி (நவம்பர் 2,2007). "Senior Tamil Tiger leader killed". பிபிசி. பார்த்த நாள் நவம்பர் 2,2007. தாயக செய்தியாளர் (நவம்பர் 2,2007). "வான் குண்டுத்தாக்குதலில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரச்சாவு" (html). புதினம் இணையத்தளம். பார்த்த நாள் நவம்பர் 2,2007. தமிழினம் இரு முனைப்போரை சந்திக்கின்றது - தமிழ்ச்செல்வனின் இறுதி உரை

முன்னர் --- தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியற்துறைப் பொறுப்பாளர் 1993-நவம்பர் 2007 பின்னர் பா. நடேசன்

Suppayya Paramu Thamilselvan, commonly known as S. P. Tamilselvan, (sometimes transcribed as "Tamilchelvan"),[1] was the leader of the political wing of the Liberation Tigers of Tamil Eelam, an organisation fighting for a separate state for the ethnic Tamil minority in northern Sri Lanka from majority Sinhalese govt. He was a prominent negotiator and one of the closest associates of LTTE leader Velupillai Prabhakaran.[2][3]

Biography

Thamilselvan, who was born in Chavakacheri, Jaffna in 1967, joined the LTTE in 1984,.[1][4] At one point, he was the personal bodyguard for the LTTE's leader, Vellupillai Prabhakaran. He became the LTTE organisation area commander for Jaffna during the IPKF intervention in the late 1980s. In 1993, he suffered a shrapnel wound at the Punarin battle which left him with a permanent limp and since then he walked with the aid of a cane.[5] In 2001, he narrowly avoided being killed by the Sri Lankan Army's Deep Penetration Unit.

Thamilselvan began to rise in the movement after the capture of Jaffna city by government forces in the late 1990s. He was the international face of the separatist group led by Velupillai Prabhakaran and outlawed as a terrorist organisation by some countries. When Norway began mediating in the peace efforts, he began to become more prominent due to the worsening health of the LTTE's international spokesman, Anton Balasingham, and led the LTTE's delegation during peace talks in Geneva. Death

Thamilselvan, along with 5 other high ranking Tamil Tiger rebels were killed in sleep on November 2, 2007 by a precision air strike carried out by the Sri Lanka Air Force (SLAF) on an undisclosed location near the LTTE's stronghold town of Kilinochchi. Thamilselvan's fortified bunker was hit by Sri Lankan Bunker Blaster bombs of the SLAF fighter jets (mig 27, kfir), igniting fuel tanks stored inside and collapsing the structure.[6][7][8][9][10] The LTTE posthumously promoted Thamilselvan to Brigadier after his death, the first time the LTTE has award this rank.[11]

Widow and children

With the end of the Sri Lankan civil war and the defeat of LTTE, Thamilselvan's widow Sasirekha and two children surrendered to the government forces. From May 2009 to May 2011, they were kept under protective custody at a chalet in the Panagoda army cantonment. They were allowed to maintain "supervised" contact with close relatives. In May 2011, they were released under a restricted release order.[12]

References

Sunday Times, Situation Report: SLAF regains its image with powerful strike The Times Online, Tamil Tiger No 2 killed in government air raid "The Government is Creating an Environment for War" - TIME SP Thamilselvan | Obituaries | Guardian Unlimited "The Government is Creating an Environment for War" - TIME Political Leader of Sri Lanka’s Tamil Tigers Killed in an Airstrike - New York Times Sri Lanka Kills terrorist Leader - TIME Sri Lankan military assassinates LTTE political leader in air strike Associated Press, Tamil Tiger political chief killed in Sri Lanka strike Press TV - Top Tamil Tiger leader killed Thamilselvan killed in SLAF air strike "Thamilselvan widow and children released from custody at Panagoda cantonment"

Obituary in The Times, 14 November 2007

Post a Comment

 
Top