GuidePedia

0


Maalaimalar

ஆர்.கே.நகர் தேர்தல்: இந்திய கம்யூ. வேட்பாளருக்கு சீமான் ஆதரவு

சென்னை, ஜூன் 15–
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சி.மகேந்திரனுக்கு ஆதரவு தெரிவிப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சீமானுக்கு நன்றி தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் மார்க். கம்யூனிஸ்டு மற்றும் இடதுசாரிகள் ஆதரவு பெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி.மகேந்திரனுக்கு வாக்களிப்போம் என நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் முடிவை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வரவேற்பதுடன் நன்றியும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")



Post a Comment

 
Top