Dinamani
இலங்கை அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்
நாமக்கல் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் இலங்கை அரசைக் கண்டித்து ராசிபுரத்தில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது.
இலங்கையில் நடைபெறும் ராணுவக் கருத்தரங்கில் இந்திய அரசு பங்கேற்கக்கூடாது என வலியுறுத்தியும், தமிழக முதலமைச்சரைத் தவறாகச் சித்திரித்துக் கருத்து வெளியிட்ட இலங்கை அரசைக் கண்டித்தும், பாலஸ்தீன மக்களைப் படுகொலை செய்யும் இஸ்ரேல் நாட்டைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் நாமக்கல் கிழக்கு மாவட்டத் தலைவர் மு.ரா.சங்கரலிங்கம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் நல்வினைசெல்வன் முன்னிலை வகித்தார். மாவட்ட இணைச் செயலர் பெ.பத்மநாபன், துணைத் தலைவர் அருள்முருகன், மேற்கு மாவட்டத் தலைவர் நடராசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Maalaimalar
ராசிபுரத்தில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்
ராசிபுரம், ஜூன்.11–
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் பர்மாவில் நடைபெறும் இஸ்லாமியர்கள் மீதான புத்த மத வெறி இன படுகொலையை கண்டித்தும், இதை மத்திய அரசு தடுத்து நிறுத்தக் கோரியும் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் எம்.ஜி.ஆர். சிலை அருகில் தொகுதியின் தலைவர் ராவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தொகுதி இணைச் செயலாளர் அருண்குமார் வரவேற்றார். தொகுதி துணைத் தலைவர்கள் மாணிக்கம், சீனிகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் பொ.நடராசு, மாவட்ட இளைஞர் பாசறை பூபதி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
இதில் பட்டணம் பொருப்பாளர்கள் மாரிமுத்து, குமரேசன் நாமகிரிபேட்டை செல்வகுமார், சீராப்பள்ளி யுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினார்கள். முடிவில் ராசிபுரம் நகர செயலாளர் சத்தியராசு நன்றி கூறினார்.
Post a Comment