Dinakaran
மறைந்த நிர்வாகிக்கு சீமான் இரங்கல்
லால்குடி, : திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த புள்ளம்பாடியில் நாம்தமிழர் கட்சி நிர்வாகியின் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் பேசியதாவது: தமிழகத்தில் தமிழன் இன்று மொழி, பண்பாடு, கலாச்சாரம், உணவு என எல்லாவற்றையும் மறந்து விட்டான். இலவசமாக மிக்சி, கிரைண்டர், பேன் தரும் தமிழக அரசு ஏன் தண்ணீரை மட்டும் விற்பனை செய்கிறது. தவித்த வாய்க்கு தண்ணீர் தரும் நமது பண்பாட்டை சிதைத்து தண்ணீரை வியாபார பொருளாக மாற்றி விட்டது என்றார்.
Post a Comment