News7 Tamil
நாம் தமிழர் கட்சியின் மாநாடு, அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தும் : சீமான் |24 May 2015
திருச்சியில் தொடங்கியுள்ள நாம் தமிழர் கட்சியின் மாநாடு, அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி அரசியல் மாநாடு திருச்சி - மதுரை சாலையில் பஞ்சப்பூரில் மாலை 4 மணிக்கு தொடங்கியுள்ளது. மாநாட்டின் துவக்கமாக மேடைக்கு அருகில் உள்ள கொடிக்கம்பத்தில் கட்சிக் கொடியை சீமான் ஏற்றிவைத்தார். மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் பலர் வந்திருந்தனர். 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாநாடு தொடங்குவதற்கு முன்னர் நமது செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மாநாட்டில் முக்கிய தலைவர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும், இந்த மாநாடு அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
Post a Comment