Inam Movie Review by நல்ல தம்பி
https://www.facebook.com/Nallathambi.S/posts/561445537302868?stream_ref=10
சற்று முன் இனம் படம் பார்த்தேன் :
ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி இருக்கிறார்கள், விடுதலை புலிகளையும், தமிழர்களையும்.
கதை ஓட்டத்திற்கு சம்பந்தமே இல்லாத காட்சிகளை இங்கு பட்டியளிட்டு இருக்கிறேன்
படத்தின் ஒரு காட்சியில் நடிகர் கருணாஸ் வகுப்பறையில் ஆங்கிலப் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். ஆங்கிலம் படித்தால் உலகில் எங்கும் செல்ல முடியும், நீ வாழ முடியும் என்று சொல்கிறார், அப்பொழுது அங்கு வருகிற விடுதலைப்புலிகள் கரும்பலகையில் வெள்ளை வேட்டியை கட்டி போர்க்காட்சிகளைத் திரையிட்டு காண்பிக்கிறார்கள். கருணாஸ் அச்சமும் அருவெறுப்புமாய் அவர்களைப் பார்க்கிறார். அந்த பண்ணிரண்டு வயது சிறுவர்களிடம் விடுதலைப் புலிகள் வன்முறையை தூண்டுவதகாவும் அவர்கள் இயக்கத்திற்கு வலுக்கட்டாயமாக அழைப்பது போன்றும் காட்டியிருக்கிறார்கள். விடுதலை புலிகளை பார்த்து மக்கள் பயப்படுவதுபோல் காட்டியிருகிரார்கள்.
குடும்பமே இல்லாதவர்களெல்லாம் சேர்ந்து ஒரு குடும்பமாக வாழ்ந்ததாகக் கதையைத் தொடங்கும் இளம்பெண், என் அம்மாவைப் பலர் சேர்ந்து கற்பழித்ததன் விளைவாக நான் பிறந்தேன். நான் பிறந்தது தெரியும், ஆனால் பிறப்பின் மூலம் தெரியாது என்று தொடங்கும்போதே எங்கள் குழந்தைகள் இப்படித்தான் உருவானர்கள் என்று சொல்லத் துணிந்த சந்தோஷ் சிவனின் வக்கிர சிந்தனை கண்டு தமிழர்களாகிய எங்களுக்கு மனம் வலிக்கிறது. உங்களுக்கு?
ஒரு இடத்தில், இயக்கத்திலிருக்கும் அவன் நன்றாகச் சோறு சாப்பிட்டிருக்க மாட்டான் அவனுக்கு வாய்க்கு ருசியாக சோறு ஆக்கிப் போடவேண்டும் என்று சொல்கிறார் சுனாமி அக்கா என்கிற கேரக்டரில் நடித்திருக்கும் சரிதா. இன்னொரு இடத்தில் ஒரு விடுதலைப்புலியே நல்லசோறு சாப்பிட்டு நாளாயிற்று என்று சொல்கிறார். மற்றொரு இடத்தில் இரவில் ஒரு வீட்டுக்குள் நுழைகிற போராளி அங்கு வைக்கப்பட்டிருக்கும் பாலைக்குடித்து விட்டு வெறிபிடித்த மாதிரி மாதுளம்பழத்தைக் கடிக்கிறார். அந்த நேரம் பார்த்து அங்கு வரும் சிங்கள ராணுவன் அங்கு இருக்கும் ஒரு சிறுவனை எது செய்யாமல் போராளியை மட்டும் கொன்று சிங்கள ராணுவம் மக்களை கொன்றதில்லை என்று காட்சிப்படுத்தி இருகிறார்கள்
லீடர் செத்துட்டாரு. அவர் சாகும்போது நான் பக்கத்தில் இருந்து பார்த்தேன் அவர் சாகும்போது கண் திறந்து இருந்தது என்று உடலெங்கும் கட்டுகளோடு மருத்துவமனையில் படுத்திருக்கும் மீசை முளைக்காத சிறுவன் சொல்கிறான்
தமிழர் பகுதிகளில் ஒரு புத்தபிட்சு எதற்கு வந்தார்? எப்படி வந்தார்? என்பனவற்றைத் தாண்டி அவர் தன்னுடைய தண்ணீர் சேமிக்கும் பாத்திரத்துக்குள் தெரியாமல் வந்துவிட்ட மீன்குஞ்சுகளைத் திரும்பவும் கால்வாயில் விடுவதும் தன் பையிலிருந்து ஒரு பழத்தை எடுத்துக் கொடுப்பதும் எதை சுட்டிக்காட்டுகிறது?
உயிரிழந்த சிங்கள ராணுவத்தினரின் கையில் ஒரு குழந்தையின் புகைப்படம் இருக்கிறது, அது மக்களுக்குப் புரியாமல் போய்விடுமோ என்பதற்காக அதை எடுத்துப் பார்த்து விட்டுத் திரும்பவும் அங்கேயே வைக்கிற மாதிரியான காட்சியில் என்ன சொல்ல வருகிறார்கள்? குண்டுவெடிப்பின் போது உடைந்து சிதறிடும் பொம்மைகளில் விநாயகர் பொம்மை, இயேசுநாதர் பொம்மையும் சிதறிக் கிடப்பது நடந்த வரலாறு. கூடவே புத்தர் சிலையும் உடைந்து கிடக்கிறதே? அது எதற்காக?
போர்க்காட்சியொன்றில் மக்களுக்கு மத்தியிலிருந்து விடுதலைப்புலிகள் சுடுவதாகவும் மக்களை விலகிப்போகச் சொல்லிவிட்டு சிங்கள இராணுவம் சுடுவதாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது , அப்பொழுது சிங்கள ராணுவத்தினர் பக்கத்தில் ஒரு பாதிரியார் வெள்ளை கொடியுடன் முட்டிக்கால் போட்டு உட்காந்து இருக்கிறார், வெள்ளை கொடியுடன் வந்தவரை சிங்கள ராணுவம் ஏதுவும் செய்யவில்லை என்று உண்மைக்கு மாறாக காட்சி அமைத்து இருக்கிறார்கள்.
இந்தவெற்றி பற்றிச் சொல்லுங்க கேப்டன், என்று ஒருவன் கேட்க அதற்கு, மிகவும் வருத்ததுடன் இவர்களெல்லாம் நம் நண்பர்கள் அவர்கள் செய்த தவறினால் இறந்திருக்கிறார்கள், இதை எப்படிக் கொண்டாட முடியும்? என்று இராணுவதளபதி கேட்பது போன்ற காட்சி சொல்கிற அர்த்தம் என்ன?
தமிழகத்துக்குப் போய் விடலாம் என்று தப்பி வருகிற வேளையில், ரஜினி, ஆயிஷா (ஒருவர் தமிழ் ,இன்னொருவர் முஸ்லிம்) ஆகிய இரு பெண்களையும் சிங்கள இரணுவத்தினர் பாலியல் வன்குணர்வுக்குட்படுத்தி அதை மொபைலில் படம் பிடிக்கின்றனர். அதைத் தொடர்ந்து அந்தப்பெண் நீர்நிலையன்றில் கறையைக் கழுவும் காட்சியும் இடம் பெறுகிறது? இந்தக்காட்சி சிங்கள இராணுவம் தமிழ்ப் பெண்கள் நிகழ்த்தும் கொடுமைகளை வெளிக்காட்டவா? இல்லை அங்கு உள்ள தமிழச்சிகள் எல்லாம் கர்ப்பை இழந்தவர்கள், இழந்த மானத்தை பெரியதாக எண்ணாமல் கழிவி விட்டு செல்பர்கள் என்று காட்டவா ?
குடும்பமே இல்லாதவர்களாகச் சேர்ந்து ஒரு குடும்பமாக வாழ்ந்தோம் என்று கதையைத் தொடங்கும் பெண் சொல்லும் கதையில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பாதிப்பேர், இறந்து விட்டார்கள், மீதிப்பேர் தமிழகத்துக்குத் தப்பி வந்து விட்டார்கள். அப்படியிருக்கும் போது, பாலியல் வன்புணர்வின் காரணமாக கர்ப்பம் தரித்திருக்கும் அவர், என் குழந்தையையும் என்னைப் போல அனாதையாக விட மாட்டேன் என் குடும்பத்தைத் தேடி நான் போவேன் என்று சொல்லி படத்தை முடிப்பதன் மூலம், உன்னைக் கற்பழித்த சிங்களவனைத் தேடிக்கண்டு பிடித்துக் குடும்பம் நடத்து, அதுதான் எல்லாச் சிக்கல்களுக்கும் தீர்வு என்று சொல்ல வருகிறாரா?
ரெண்டு நெடுக்கு நாலு குறுக்கு ஊர்வலம், நீயுந்தான் போகணும் நானுந்தான் போகணும் சந்தோஷமா வாழணும் என்று படம் முடிகிற நேரத்தில் ஒலிக்கும் பாடல் வரிகள் சொல்வதென்ன?

Post a Comment