Paari Saalan
தமிழர்களின் தாய் நிலமான ஈழத்தில் 2009 ஆம் ஆண்டு நம் இனம் , ஒரு மாபெரும் துரோகத்தின் காரணமாக வீழ்ந்தது , அந்த வரலாற்று துரோகத்தின் முழுமுதற் காரணம் நாம் தந்தைப் பெரியார் என்று அனைவரும் நம்பி வந்த ஈ.வே. இராமசாமி நாயக்கர் தான் என்றால் நம்ப முடிகிறதா ?
வரலாற்றை அறியாத இனம் வரலாறு படைக்க இயலாது , தமிழன் தன் வரலாற்றை மறந்ததால் தான் இன்று இந்த அளவுக்கு அனைத்தையும் இழந்து நிற்கிறான்!! ஈழத்தில் நடந்த இனப்படுகொலையும் நாம் நம் வரலாற்றை மறந்ததால் தான் . ஈழத்தில் மொத்தம் மூன்று இனங்கள் வாழ்ந்து வருகிறார்கள் !
1) தமிழர்கள் (மண்ணின் மைந்தர்கள் ) 2) சிங்களவர்கள் (2000 ஆண்டுகளுக்கு முன் குடியேறியவர்கள்) 3) தெலுங்கர்கள் (16ஆம் நுற்றாண்டு இலங்கையின் மேல் படையெடுத்து வென்றவர்கள்)
இங்கு சிங்களவர்களும் , தமிழர்களும் வாழும் வர்க்கமாகவும் , தெலுங்கர்கள் ஆளும் வர்க்கமாகவும் இருந்து வந்துள்ளார்கள் !
வெள்ளையர்கள் காலக்கட்டத்தில் அவர்களுடன் நெருங்கி இருந்த இலங்கைத் தெலுங்கர்கள் , வெள்ளையர்களிடம் இருந்து நாட்டின் அதிகாரம் மீண்டும் தங்களுக்கே வரும் வண்ணம் பார்த்துக்கொண்டனர் . அவ்வாறு கிடைத்த அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள தங்கள் தெலுங்கு அடையாளத்தை மறைத்துக் கொண்டு தங்களை சிங்களவர்களாக காட்டிக்கொண்டார்கள் ( திராவிடர் என்று தமிழ் நாட்டில் ஒளிந்திருப்பது பொல) . இதற்காகத் தான் ஈழத்தில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இனக்கலவரத்தை தூண்டி விட்டார்கள் . அதன் பின் நடந்தது நாம் அனைவரும் அறிந்ததே !
ஈழத்தமிழர் தந்தை என்று அழைக்கப்படும் தந்தை செல்வா தனது “இலங்கை இனக்கூறு” என்ற நூலில்(பக்கம் 150) , தானும் ஈ.வே .ராமசாமி நாயக்கரும் கலந்து பேசியவற்றை பற்றி குறிப்பிடுகிறார் , அந்த புத்தகதில் வரும் செய்தி :
“ இலங்கை, தமிழனின் வரலாற்று பூர்வீக தாய்மண் அது போல் இலங்கையில் சிங்கள குடிகளும் ஒரு பகுதிகளில் வாழ்கின்றார்கள் ஆனால் இலங்கை சுதந்திரம் அடைந்தவுடன் அது இலங்கை மக்களிடம் சென்றடையாமல் இந்திய வம்சா வழி தெலுங்கர் கைகளில் பிரித்தானிய அரசு ஒப்படைத்துள்ளது..இலங்கையில
இவ்வாறு அந்த புத்தகத்தில் தந்தை செல்வா குறிப்பிடுகிறார் ,
தமிழர்களின் நலனுக்காக ஈ.வே.ரா இந்த சந்திப்பு பற்றி எங்காவது பேசிய ,எழுதிய ஆதாரங்கள் உண்டா ?
அப்போதே இந்த திராவிட இயக்க கயவர்களுக்கு இலங்கையில் தெலுங்கர்கள் தான் ஆளும் வர்க்கம் என்று தெரிந்தல்லவா உள்ளது !! ஆனால் இன்றளவும் இந்த வரலாற்றை மறைப்பதற்கான காரணம் என்ன ?
தமிழனை ஆளவேண்டும் என்ற ஆதிக்க எண்ணம் தானே ?
தமிழனை தமிழனே ஆளனும்!!!! தமிழினப் பகைவர்கள் நம் எல்லைத் தாண்டி ஓடணும் !!!!! வாழ்க தமிழ் ! வளர்க தமிழர் !!! (நன்றி – திராவிட திருடர் ) இலங்கையில் தெலுங்கர்கள் பற்றிய வரலாற்றை மேலும் அறிய
Post a Comment